அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது – தவெக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

தவெக, திமுக இடையே தான் போட்டியே எனவே திசை மாறி சென்று விடாதீர்கள் என்று முதலமைச்சர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்.

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தவெக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பெண் எம்எல்ஏக்கள் மட்டும் புறப்பட்டனர். முதலில் பெண் எம்எல்ஏக்களிடம் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில் அவர்கள் புறப்பட்டனர். கூட்டத்தின்போது, அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும் என தவெக எம்எல்ஏக்களுக்கு முதலைமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறி இனிப்பு வழங்கிய முதலமைச்சர், நீங்கள் எந்த ஒரு விமர்சனத்திற்கும் ஆளாகக் கூடாது, அதிகார துஷ்பிரயோகம் செய்யகூடாது, மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து நேரடியாக எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அவர்கள் மனம் நோகும் படி நடந்து கொள்ளக் கூடாது, ஏனென்றால் அவர்கள் ஓட்டு போட்டு தான் நாம் வெற்றி பெற்றோம்.

தவெக, திமுக இடையே தான் போட்டியே எனவே திசை மாறி சென்று விடாதீர்கள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சதி செய்து வருவதால் கூடுதல் கவனம் தேவை, மக்கள் சேவையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், நல திட்டங்களை மக்களிடத்தில் நல்ல முறையில் கொண்டு சேருங்கள் என பல்வேறு அறிவுரைகளை 10 பேர் கொண்ட குழுக்களாக தனித்தனியாக அழைத்து முதல்வர் வழங்கியதாக கூறப்படுகிறது. பெண் சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்ந்து ஆண் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருவருக்கு பின் ஒருவராக வெளியே செல்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.