அமெரிக்காவின் ரோட் தீவைச் சேர்ந்த சிறுமி வைத்துவிட்டு சென்ற பிஸ்கட்டை சாப்பிட்டது கிறிஸ்துமஸ் தாத்தாவா என்பது தொடர்பாக, DNA பரிசோதனை செய்து வருவதாக காவல்துறை தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் ரோட் தீவைச் சேர்ந்த ஒரு சிறுமி ஓருவர், அப்பகுதியில் உள்ள கம்பர்லாண்ட் பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்திற்கு அனுப்பிய கோரிக்கை மனு தான் இப்போது பேசு பொருள். அதாவது கடந்த 24 ஆம் தேதி இரவு தாம் ஒரு ஓரீயோ பிஸ்கட் மற்றும் கேரட்டை கிறிஸ்துமஸ் தாத்தாவிற்காக வைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார். பின்னர் வந்து பார்க்கும் போது அந்த பிஸ்கட் மற்றும் கேரட்டை சாப்பிட்டு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆகவே எனது வீட்டிற்கு கிறிஸ்துமஸ் தாத்தா வந்து அதனை சாப்பிட்டுவிட்டு சென்றாரா என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்காக டி.என்.ஏ. பரிசோதனை செய்யவேண்டும். ஆகவே பிஸ்கட் மற்றும் கேரட்டின் எஞ்சிய பகுதிகளை பத்திரமாக இந்த புகார் மனுவுடன் இணைத்துள்ளதாக அந்த சிறுமி கூறியுள்ளார். இவற்றை DNA பரிசோதனை செய்து, இந்த பிஸ்கட் மற்றும் கேரட்டை சாப்பிட்டது கிறிஸ்துமஸ் தாத்தா தானா என்பதையும், அவர் உண்மையாகவே இருக்கிறாரா என்பதையம் கண்டறியுமாறு புகார் மனுவில் கோரிக்கையுள்ளார். அந்த சிறுமி தன்னுடைய நோட்டுப் புத்தகத்தின் ஒரு பகுதியில் தம்முடைய கோரிக்கையை எழுதி, பிஸ்கட் மற்றும் கேரட் எச்சங்களுடன் அவற்றை கொடுத்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிந்த கம்பர்லேண்ட் காவல் துறை, பின்னர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில், “ஒரு இளம் புலனாய்வாளரிடமிருந்து” இந்த மாதம் ஒரு கடிதம் வந்தது. இதையடுத்து. “ஓரியோ குக்கி” மற்றும் சில பேபி கேரட்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவால் உண்ணப்பட்டதா என்பதை அடையாளம் காண DNA சோதனை செய்யப்பட்டது.
“இந்த சிறுமி புலனாய்வு செயல்முறையின் மீது தீவிர உணர்வு கொண்டவராக உள்ளார். மேலும், காவல் துறையில் சமர்ப்பிப்பதற்காகத் தனது ஆதாரங்களை முறையாக பேக்கேஜிங் செய்துள்ளார். இந்த ஆதாரங்கள் ரோட் தீவின் சுகாதார தடயவியல் அறிவியல் பிரிவுக்குப் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டது. அவரின் கேள்விகளுக்குப் பதில்களை வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவித்தனர்.
கிறிஸ்மஸ் தாத்தா குறித்து சிறியவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பெரும்பாலும் பெரியவர்கள் சிறியவர்களுக்கு கூறுவதில்லை. காரணம் அது பல குழந்தைகளை கவலைக்குள்ளாகும் என்பதாலும், காலப்போக்கில் அவர்களே உணர்ந்து கொள்வார்கள் என்பதாலும் சிறியவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அப்படியே விட்டு விடுகின்றனர். இந்நிலையில், ரோட் தீவு காவல் துறை ஒரு சிறுமியின் இந்த ஆர்வத்தை கருத்தில் கொண்டு DNA விசாரணை நடத்தப்படும் என்று காவல் துறையின் பதில் நடவடிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.