நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40-40 ஜெயித்தால், திமுக ஆட்சி தானாக முடிவுக்கு வரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோயில் முன்பு அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி
சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய அவர், “1998-ல் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தற்போது திமுக ஆட்சியில் கோயம்புத்தூரில் மீண்டும் நிகழ்ந்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முன்பெல்லாம் மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக்கடிக்கும். ஆனால் திமுக ஆட்சியிலோ, மின் கட்டண ரசீது வந்தாலே ஷாக்கடிக்கிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் சொத்து வரி பல மடங்கு உயர்ந்துள்ளது. இலங்கை போல் தமிழகத்திலும் மக்கள் எழுச்சி பெற்று திமுக ஆட்சி அகற்றப்படும் நாள் வெகு தொலவில் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40-40 ஜெயித்தால், திமுக ஆட்சி தானாக முடிவுக்கு வரும்.
ஒரு சாதாரண விவசாயி, முதலமைச்சர் ஆக முடியும் என்பது அதிமுகவின் வரலாறு” என்று
பேசினார்.