ஒன்றிய அரசின் புதிய மீன்பிடி மசோதாவை திமுக எதிர்க்கும் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்குவதற்கு, ஒன்றிய அரசை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார். ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய சட்டங்கள், மாநிலங்களுக்கான உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாக கூறிய அவர், அனைத்தையும் ஒன்றிய அரசுதான் முடிவு செய்யும் என நினைக்கக்கூடாது என விமர்சித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய மீன்பிடி மசோதாவை திமுக எதிர்க்கும் என கூறிய அவர், மிக கடுமையான தண்டனைகளை ஒன்றிய அரசு இந்த மசோதாவில் கூறியுள்ளது என தெரிவித்தார். புதிய சட்டம் மீனவர்களை பழிவாங்கும் வகையில் இருக்கிறதே தவிர, அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக இல்லை என கனிமொழி எம்பி தெரிவித்தார்.