நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

நாளை திமுக எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இதில் பாஜக தலைமை வகிக்கும்…

நாளை திமுக எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இதில் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும்,  காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும்,  மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும்,  காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான அணி 39 இடங்களைக் கைப்பற்றியது.  இதில் திமுக கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது.  இந்த நிலையில்,  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் ‘கலைஞர் அரங்கத்தில்’  நாளை (ஜூன்.8) மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.