அமைச்சர் பொன்முடிக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம்!

அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி விலைமாதுவை குறிப்பிட்டு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

“அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.