திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கடந்த 2021 தேர்தல் பரப்புரையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டபோதும் கவச உடை அணிந்து தனது வாக்கை செலுத்தியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தொடர்ந்து சுற்றுப் பயணம், நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வந்த கனிமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சென்னையில் உள்ள இல்லத்தில் கனிமொழி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
-ம.பவித்ரா