திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: நாளை நடக்கிறது

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை…

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், திமுக மட்டுமே 120 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.

152 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, வரும் 7 ஆம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க இருக் கிறார். கொரோனா காரணமாக, ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார்.
…………..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.