கடந்த 10 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சி படுபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராமத்தில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மு.க.ஸ்டாலின், வருகிற தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களால் மக்களின் அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க முடியவில்லை என சாடிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சி படுபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் சில நாட்களுக்கு முன்பு 100 நாள் செயல்திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மக்களின் குறைகள் அடங்கிய புகார் மனு பெட்டிகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று பதவிப்பிரமாணம் செய்தவுடன், மக்களின் பிரச்னைகள் 100 நாளில் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.