காற்றிலேயே மொபைலுக்கு சார்ஜ் ஏற்றலாம்; சியோமியின் புது டெக்னாலஜி

காற்றின் மூலம் மொபைல் போன்களுக்கு சார்ஜ் ஏற்றும் டெக்னாலஜியை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் செல்போன் சந்தையில் நோக்கியா, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் அசைக்க முடியாத சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த சமயத்தில் கடந்த 2012ம் ஆண்டு…

காற்றின் மூலம் மொபைல் போன்களுக்கு சார்ஜ் ஏற்றும் டெக்னாலஜியை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் செல்போன் சந்தையில் நோக்கியா, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் அசைக்க முடியாத சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த சமயத்தில் கடந்த 2012ம் ஆண்டு இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் களமிறங்கியது. நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவன மொபைல்களில் இருக்கும் சிறப்பம்சங்களை மிக குறைவான விலைக்கு சியோமி தந்தது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் சியோமி நிறுவனம் கொண்டு வந்த அனைத்து மொபைல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், இந்திய மொபைல் சந்தை சியோமி பக்கம் சென்றது. இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த வருடங்களில் MI டிவி, MI லேப்டாப், பவர்பேங்க் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகப்படுத்தியது. இதுவும் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது

இந்தநிலையில், ‘MI ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர்’ எனும் டிஜிட்டல் டிவைஸ்களை காற்றிலேயே சார்ஜ் செய்யும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வொயர் பயன்படுத்தாமல் ஒரே நேரத்தில் பல டிவைஸ்களை சார்ஜ் செய்ய முடியும். இந்த தகவலை சியோமி நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதிகபட்சமாக 2 மீட்டர் தூரம் வரை இந்தக் கருவியின் மூலம் டிஜிட்டல் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது.
வெகு நாட்களாவே ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்து டிஜிட்டல் சாதனங்களை வடிவமைக்கும் நிறுவனங்கள் பேசி வந்தாலும் இதுவரை வணிக ரீதியாக அதை வெற்றிகரமாக எந்தவொரு நிறுவனமும் சந்தையில் அறிமுகம் செய்ததில்லை. முடிந்தவரை இதை டெமோ என்ற படியிலிருந்து அடுத்த படிக்கு நாங்கள் முன்னேறினாலே அது புரட்சியாக இருக்கும் என சியோமி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply