நவ.20-ல் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம்… அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் வரும் நவ. 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நவ. 20ம் தேதி காலை 10.30 மணியளவில் திமுக உயர்நிலை செயல்திட்ட…

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் வரும் நவ. 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நவ. 20ம் தேதி காலை 10.30 மணியளவில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20.11.2024 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.