“திமுகவில் ஏ டீம் பி டீம் என்று ஒன்று கிடையாது; ஒரே டீம்தான், அது தளபதி
தலைமையிலான டீம் தான் ” என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ராஜ ராஜகோபாலத் தொண்டைமானின் உருவ சிலைக்கு திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அறையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு புதுக்கோட்டையில் மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திராவிட மாடல் தேசிய மாடலாக மாற்றப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பதோடு உங்கள் பதில தான் என் பதில் என்று கூறினார்
இதன்பிறகு ஓபிஎஸ் திமுகவின் விடியும் என்று அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனரே
என்று நிருபர்கள் கேட்டதற்கு திமுகவில் ஏ டீம், பி டீம் என்பது ஒன்று கிடையாது
தளபதி தலைமையில் ஒரே டீம் தான் என்று கூறினார்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.








