அக்.9இல் திமுக பொதுக்குழு கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு

“தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க தி.மு.க. பொதுக்குழு அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக்…

“தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க தி.மு.க. பொதுக்குழு அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுத் தேர்வில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
சென்னை, அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ள இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தவறால் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.