தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நாளை தொடங்க உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
நேற்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விருப்ப மனுத் தாக்கல் செய்தார். மேலும் விஜய்காந்த் மகன் விஜய பிரபாகரனும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தேமுதிகவில் விருப்ப மனு பெற்று சமர்ப்பிக்க, இன்று இறுதி நாள் என்பதால், அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, காலை மாலை என இரு பகுதிகளாக நடைபெறும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







