சட்டமன்றத்தில் சட்டையை கழற்றிய காங்கிரஸ் எம்எல்ஏ!

கர்நாடக சட்டமன்றத்தில் ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ தொடர்பான விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஷ் சட்டமன்ற வளாகத்திலேயே சட்டையைக் கழற்றி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே…

கர்நாடக சட்டமன்றத்தில் ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ தொடர்பான விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஷ் சட்டமன்ற வளாகத்திலேயே சட்டையைக் கழற்றி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தை சபாநாயகர் விஷ்வேஷ்வரா ஹெக்டே காகேரி தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது சபாநாயகர் பேச்சை இடைமறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஷ்,“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆர். எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை’ என முழக்கமிட்டதுடன் தன்னுடைய சட்டையைக் கழற்றிவிட்டு சட்டமன்றத்தின் மையப் பகுதியில் வந்து கோஷமிட்டார். பின்னர் மாநில காங்கிரஸ் டி.கே.சிவக்குமார் சங்கமேஷை சமாதானப்படுத்தி அவரை சட்டையை அணியச் செய்தார்.

எம்எல்ஏ சங்கமேஷின் செயலை கண்டிக்கும் விதமாக அவர் அவை நடவடிக்கைகளிலிருந்து எழு நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.