விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இன்று தொடங்கியது. இதன் முதல் சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவின் ஜோகோவிச், இங்கிலாந்தின் ஜாக் ட்ராப்பரை எதிர்கொண்டார்.
19 வயதான ட்ராப்பர், முதல் செட்டை கைப்பற்றி, ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். 2வது செட்டில் பதிலடி கொடுத்த ஜோகோவிச், தொடர்ந்து 3 மற்றும் 4வது செட்டையும் வென்று அசத்தினார். இதனால் 4-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.







