முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

அமேசானின் முன்னாள் நிர்வாகியை இழுத்தது வாட்ஸ் அப்

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் இந்திய பணப்பரிவர்த்னை நிர்வகிக்கும் இயக்குநராக முன்னாள் அமேசான் உயர் அதிகாரி நியமக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. பெட்டிக்கடைகள் தொடங்கி பெரு வணிக நிறுவனங்கள் வரை ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலனவற்றில் கூகுள் பே, அமேசான் பே, போன் பே போன்றவை ஆக்கிரமித்துள்ளன. இதனிடையே, குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கு இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றான வாட்ஸ் அப் செயலி கடந்த 2020ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் பணப்பரிவர்த்னை செய்வதற்கான சேவையை வழங்கியது. இருப்பினும் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை போல் மக்கள் மத்தியில் இது பிரபலமாகவில்லை.

இந்நிலையில், அமேசானில் மூத்த அதிகாரியாக பணியாற்றிய மனீஸ் மகத்மே என்பவரை இந்தியாவில் வாட்ஸ் அப் பணபரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் இயக்குநராக நியமித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இவர், அமேசான் பே நிறுவனத்திற்கான தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுக்களை வழிநடத்தியுள்ளார். அத்துடன், சிட்டிகுரூப் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுடனும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கொடைக்கானலில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிப்பு: உயர் நீதிமன்றம்

Gayathri Venkatesan

சபாநாயகர் ஆகிறார் அப்பாவு!

Halley karthi

கர்நாடகாவில் இரண்டு வாரங்கள் தொடர் ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி ?

Halley karthi