முக்கியச் செய்திகள் சினிமா

விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானது; இந்தி நடிகர்

விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானதாக இருக்கும் என இந்தி நடிகர் நிதிஷ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். 

திரையுலகில் சமீபகாலமாக விவாகரத்து செய்யும் பிரபலங்களின் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நாக சைதன்யா – சமந்தா தம்பதியினரின் விவாகரத்து அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பல காரணங்கள் கூறபட்டது. ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து எந்த விளக்கத்தையும் அவர்கள் அளிக்கவில்லை. இதுஒருபுறமிருக்க தற்போது நடிகர் தனுஷ் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக அறிவித்தார். இந்தநிலையில் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்யவில்லை. இதுகுடும்ப சண்டை மட்டுமே. அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், இந்தி நடிகர் நிதிஷ் பரத்வாஜ் தான் மனைவியை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார். இவர் மகாபாரதம் தொடரில் கிருஷ்ணர் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்தார். இவர் தனது முதல் மனைவியை 2005ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதையடுத்து ஸ்மிதா கேட் என்பவரை 2009ம் ஆண்டு 2வதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், இருவரும் பிரிந்துள்ளனர். இதுகுறித்து பேசிய நிதிஷ் பரத்வாஜ், சில மனக்கசப்புகளால் உங்களுக்கு பிடித்த ஒருவரை விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானதாக இருக்கும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புகழ்பெற்ற இந்திய தடகள வீரர் மில்கா சிங் காலமானார்!

Gayathri Venkatesan

குடிநீர்த்  தொட்டியில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை  உயிரிழப்பு 

Web Editor

ஐஏஎஸ் அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது: நீதிமன்றம்

Mohan Dass