முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

நாட்டில் 160 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

நாட்டில் இதுவரை போடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 160 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை போடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 160 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 5 கோடியே 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3 கோடியே 67 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன. மொத்தம் இதுவரை 9 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொடர் கனமழை எதிரொலி; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

EZHILARASAN D

நிலுவை தொகை-வெள்ளை அறிக்கை கேட்கும் வானதி சீனிவாசன்

G SaravanaKumar

வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு; கணவன் உட்பட 3 பேர் கைது!

Halley Karthik