மத்தியப் பிரதேசத்தில் குன்னோர் ஜன்பாத் பஞ்சாயத்துத் தேர்தலில் தோல்வி அடைந்தவரை வெற்றியாளராக அறிவித்த மாவட்ட ஆட்சியர் அந்தப் பதவிக்கு தகுதியானவர் இல்லை என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேக் அகர்வால் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பன்னா மாவட்ட ஆட்சியர் சஞ்சய் மிஸ்ரா அரசியல்வாதியின் ஏஜெண்ட் போல செயல்படுகிறார். அவர் மாவட்ட ஆட்சியராக இருக்க தகுதியுடையவர் இல்லை. அந்தப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
கடந்த மாதம் 27ம் தேதி குன்னோர் ஜன்பாத் பஞ்சாயத்து துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் பர்மானந்த் சர்மா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவை ராம்ஷிரோமணி மிக்ராவை வீழ்த்தினார்.
பர்மானந்த் சர்மாவுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அன்றைய தினமே வழங்க வேண்டும். ஆனால், அதே நாள் ராம்ஷிரோமணி மிஸ்ரா பன்னா மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் முடிவை எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, தேர்தல் முடிவை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர், மறுநாள் லாட்டரி முறையில் புதிய தேர்தலை நடத்தி ராம்ஷிரோமணி மிஸ்ரா வெற்றி பெற்றதாக அறிவித்தார் என்று பர்மானந்த் சர்மா சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.