மதுபோதையில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்ததில் ஒருவர் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பக்கநாடு பகுதியை சேர்ந்த முருகேசன், தமது நண்பர்கள் மணிகண்டன் செளந்தரராஜன், சக்திவேல் ஆகியோருடன் சேர்ந்து குன்றத்துமேடு டாஸ்மாக் கடை அருகே மது அருந்தி உள்ளார். அப்போது சக்திவேல், முருகேசனிடம் தமக்குத் தரவேண்டிய 2500 ரூபாய் பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.
இதில் வாய்த்தகராறு முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேறிய சக்திவேல், ஆடு தோலுரிக்கும் கத்தியை எடுத்து வந்து முருகேசன், மணிகண்டன் மற்றும் சௌந்தரராஜன் ஆகியோரை குத்தியுள்ளார்.
அண்மைச் செய்தி: கோதாவரி-காவிரி இணைப்பு: சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்
இதில் முருகேசனும், மணிகண்டனும் லேசான காயத்துடன் தப்பி ஓடி எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். மேலும், தலையில் கத்திக்குத்து பட்ட செளந்தரராஜன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜலகண்டபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








