பாட்னா அருகே நிலத்திற்கடியில் இருந்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை விவசாயிகள் கண்டெடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மேலும் கையிருப்பில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் அதனை டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பீகார் மாநிலத்தின் பாட்னா மாவட்டத்தில் உள்ள பசோடா கிராமத்தில் விவசாய நிலத்தை டிராக்டர் கொண்டு உளும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த நிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை விவாசயிகள் கண்டெடுத்தனர்.
பின்னர் இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றிய போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.