மானாமதுரை அருகே வேலூர் வேலாங்குளம் பகுதியில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால துண்டுக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை அருகேயுள்ள வேலூர் வேலாங்குளம் பகுதியில், கல்வெட்டு இருப்பதாக
அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோவிந்தன் தகவல் அளித்தார். இதன் பொருட்டு,
அங்குள்ள கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர், காளிராசா தலைமையில் சரவணமணியன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது தலை உடைந்த நிலையில் லட்சுமி நாராயணர் கற்சிற்பமும், சிதைவுற்ற நிலையில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டும் கிடைத்துள்ளன.மேலும், இந்த கல்வெட்டில் எட்டு வரிகள் மட்டுமே உள்ளன. அதில் நிலத்தானமும், அதற்கான எல்லையும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ‘மாடக்குளம் கீழ் மதுரை’ என்ற வரியால், இது பாண்டியர் காலக் கல்வெட்டு என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. கல்வெட்டு முன்னும், பின்னும் சிதைந்துள்ளதால் முழுமையான பொருள் கொள்ள இயலவில்லை. இதனால், அரசரின் பெயரை உறுதிப்படுத்த முடியவில்லை.
மேலும் இதைத்தவிர, கோயில் இடிமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெருமாளுக்கு உரிய சின்னமான திருவாழிக்கல் பொறிக்கப்பட்ட நிலைக்கல்லை, இப்பகுதி மக்கள் முனியன் சாமியாக வழிபடுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்