முக்கியச் செய்திகள் சினிமா

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் தாமிரா காலமானார்

கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தமிரா சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,13,163 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. தற்போது இயக்குநர் தாமிரா கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

’ரெட்டைச் சுழி’, ’ஆண் தேவதை’ படங்களை இயக்கியவர் இயக்குநர் தாமிரா. 53 வயதாகும் இவருக்குச் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள மாயா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:

Related posts

சசிகலாவின் ஆதரவு அமமுக கூட்டணிக்கே – டிடிவி தினகரன்

Jeba Arul Robinson

அலோபதி குறித்த பேச்சு; பாபா ராம்தேவ் வீடியோவை ஆய்வுசெய்யும் உச்சநீதிமன்றம்

Ezhilarasan

மணிகண்டன் கைது அரசியல் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் விளக்கம்!

Gayathri Venkatesan