இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் சந்தைகளை சனிக்கிழமை அன்றும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் அன்றைய தினம் இறைச்சி கடைகள் மீன் சந்தைகளை திறக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக இறைச்சி உண்பவர்கள் சனிக்கிழமை அன்றே இறைச்சிகளை வாங்கி வருகின்றனர்.
இதனால் சனிக்கிழமைகளில் தனி மனித இடைவெளியின்றி பெருமளவிலான இறைச்சி கடைகளிலும் மீன் சந்தைகளிலும் பொது மக்கள் குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் சூழல் உருவானது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் சந்தைகளை திறக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தடையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.







