30 ஆண்டு திரைப்பயணம்.. கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் ஷங்கர்…

  ஷங்கர் இயக்குனராக அறிமுகமாகிய திரைப்படமான ஜென்டில்மேன் வெளியாகி 30 ஆண்டுகளை கடந்தது. இதனை தனது இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படைக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். 1993-ஆம் வருடம்…

 

ஷங்கர் இயக்குனராக அறிமுகமாகிய திரைப்படமான ஜென்டில்மேன் வெளியாகி 30 ஆண்டுகளை கடந்தது. இதனை தனது இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படைக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

1993-ஆம் வருடம் ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோ நடித்திருந்தனர். வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகின.

முதல் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ஷங்கர் அதனை தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 ஆகிய திரைப்படங்கள் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் குவித்து வியக்க வைத்த திரைபடங்களில் பெரும் பங்கு வகித்தவர் இயக்குனர் சங்கர் ஆவார்.

இயக்குனர் ஷங்கர், உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படம் தொடாத வசூல் இல்லை. இவரது மூன்றாவது திரைப்படமே நடிகர் கமல் உடன் என்பது குறிப்பிடதக்கது. இன்றும் இந்தியன் திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் தனி செல்வாக்கு இருந்து வருகிறது. மேலும் இவரது இயக்கத்தில் அறிமுக நாயகன்களை கொண்டு உருவான காதலன், பாய்ஸ் போன்ற திரைப்படங்கள் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஷங்கரின் முதல்படமான “ஜென்டில்மேன்” வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் இவர். தற்போது இயக்குனர் சங்கர் ஒரே நேரத்தில் தமிழில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் லைகா தயாரிப்பில் ‘இந்தியன் 2’ என்ற படத்தையும் தெலுங்கு மற்றும் தமிழில் ராம்சண் நடித்து வரும் ‘கேம் செஞ்சர்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படைக்குழுவினருடன் இயக்குனர் ஷங்கர் கேக் வெட்டி தனது 30 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.