பார்த்திபன் இயக்கி நடிக்கும் ‘இரவின் நிழல்’ படத்தின் ட்ரெயிலர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா கடந்த மே 1ம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்வில் படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மானை அருகில் வைத்துக்கொண்டு பார்த்திபன் பேச தொடங்க அவரின் மைக் சரியாக வேலை செய்யாமல் ‘மக்கர்’ செய்தது. அப்போது கோபமாக இருக்கையில் இருந்து எழுந்தவர், ‘இதெல்லாம் முதல்லையே சொல்ல மாட்டிங்களா?’ எனக்கூறி மைக்கை கோபமாக கீழே வீசினார்.
இந்த செயல் அநாகரீகமான எனக்கூறி மேடையிலேயே பார்த்திபன் மன்னிப்பு கோரியிருந்தார். இருப்பினும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்த்திபன் மேல் விமர்சனங்களை குவித்தது. பார்த்திபன் வீசிய ‘மைக்’ கீழே அமர்ந்திருந்த ரோபோ சங்கரின் மேல் விழுந்ததாக வெளியான தகவல் விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்த்தது. ரோபோ சங்கரும் இப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது தொடர்பு கண்கலங்க ரோபோ சங்கரிடம் மன்னிப்பு கேட்டவாரு தன்னிலை விளக்கத்துடன் ஒரு வீடியோ வெளியிட்டார் பார்த்திபன்.
இதுகுறித்து பேசிய ரோபோ சங்கர், ‘சார் நேர்ல பழகுறதுக்கு ரொம்ப இனிமையானவர். மைக் வேலை செய்யலன்னு கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டார் அவ்ளோதான். என்னிடம் போனில் பலமுறை மன்னிப்பு கேட்டுவிட்டார். நான் அதெல்லாம் ஒரு விஷயமாவே எடுத்துக்கல சார் விடுங்க என கூறிவிட்டேன். அவர் யாரையும் புண்படுத்த நினைக்காத நல்ல மனிதர்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
https://twitter.com/rparthiepan/status/1521830856272191488
இருப்பின் மன உறுத்தலோடு இருந்த பார்த்திபன் ரோபோ சங்கரை நேரில் பார்த்து, அவரை கட்டியணைத்து ஒரு கையில் மைக்கை நீட்டியவாரு அவருக்கு முத்தம் கொடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். அதில் மைக்கை, ‘கண்டுபிடித்தவர் Emile Berliner, மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ சங்கர், மைக்கால் பிடிபட்டவர் பார்த்திபன் ராதா கிருஷ்ணன் என’ அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் கிண்டலான வாசகங்களுடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்தார். முத்தத்தில் முடிந்த இந்த யுத்ததால், ‘ரோபோ சங்கர் ஹாப்பி அண்ணாச்சி’ என்பது போல் வாய் நிறைய புண்ணையுடன் போஸ் கொடுத்துள்ளார் ரோபோ சங்கர். அன்புதானே எல்லாம்!







