முக்கியச் செய்திகள் சினிமா

இயக்குநர் பார்த்திபன் ஒரு டெக்னாலஜி சீனியர்-முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

இயக்குநர் பார்த்திபன் ஒரு டெக்னாலஜி சீனியர் என்று இரவின் நிழல் படத்தை பார்த்துவிட்டு  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டினார்.

பார்த்திபன், பிரிகிடா, பிரியங்கா ரூத், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் இரவின் நிழல்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு முன்பு பார்த்திபன் மட்டுமே நடித்து ஒரே ஒரு நடிகர் நடித்த படம் என்ற பெருமையுடன் வெளியானது ஒத்த செருப்பு. அதைத் தொடர்ந்து மேலும் வித்தியாசமான முயற்சியாக நான்-லீனியர் சிங்கில் ஷாட் படமாக இரவின் நிழல் படத்தை உருவாக்கியுள்ளார் பார்த்திபன்.

நான்-லீனியர் என்பது ஒரு நேர்க்கோட்டு வரிசையில் இல்லாமல் மாறி மாறி வரும் திரைக்கதை உத்தியை கொண்டதாக இருக்கும். பார்வையாளர்களுக்கு புதுவித திரை அனுபவத்தை கொடுக்கும். ஹாலிவுட்டில் லான்-லீனியர் முயற்சியில் பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்நிலையில், இந்தப் படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு ரசித்தார். அவருடன் பார்த்திபனும் உடனிருந்தார்.

படத்தை பார்த்துவிட்டு பார்த்திபனின் கையை குலுக்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இதுதெடார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “எதிலும் தனிப்பாணி – அதுதான் பார்த்திபன்! ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்! இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் டுவீட்டை ரீடுவீட் செய்து பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “Non-linear-ல், நான் சீனியர் எனத் தமிழகமே பாராட்டிவிட்டது. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி. பாராட்டப்படும்போது பட்டக் கடனும் படும் கஷ்டமும் தற்காலிகமாக தற்கொலை செய்துக் கொள்கின்றன. இனி பார்… பார்க்க …. பாராட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வன்முறையாளர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்: அதிபர் ரணில்

Mohan Dass

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் ராதாகிருஷ்ணன்!

Saravana

மேகதாது விவகாரத்தில் கர்நாடகம் பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல: டாக்டர் ராமதாஸ் ட்வீட்

EZHILARASAN D