சென்னை கானத்தூரில் இயக்குநர் அமீர் புதிதாக அமைத்துள்ள தேநீர் கடையை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் 4am Coffee & Kitchen என்ற புதிய தேநீர் கடையை இயக்குநர் அமீர் அமைத்துள்ளார். இந்த புதிய தேநீர் கடையை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி ஆகிய இருவரும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேநீர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில்
புத்தகங்களை படிக்கும் வகையில் தேநீர் கடையில் புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. தேநீர் கடை அதிகாலை நான்கு மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மீண்டும்
மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரையும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர், டெல்லியில் நீதிக்காக போராடி வரும் மல்யுத்த வீரர்கள் பக்கம் நிற்பதாக கூறினார். தேசத்தின் பெருமையை உலக அளவில் பறைசாற்றிய அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களுடைய நிலைமை கேள்விக்குறிதான் என்றும் அவர் தெரிவித்தார்.
பொழுதுபோக்கிற்காக திரைப்படங்கள் வந்த நிலை மாறி தற்போது அரசியல் சார்ந்த படங்கள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் இயக்குநர் அமீர் கூறினார்.