ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உயர் அதிகாரிகளுடன் அந்த பகுதியிலேயே தங்கியிருந்து சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், நேற்றிரவு இரு வழித் தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடட்ம பேசிய அவர், விபத்துக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
ரயில் விபத்தை சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை விரைவில் கண்டுபிடிப்பதே தங்கள் குறிக்கோள் என்றும், தங்கள் பொறுப்பு இன்னும் முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.