குளங்களில் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்கக்கூடும் என்று கோவை வட்ட மீனவர்கள் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, கோவை வட்ட மீனவர்கள் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.விடம் அளித்த மனுவில், கோவையில் உள்ள குளங்களை நம்பி 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாளாங்குளம் ஆகிய இரு குளங்களிலும் டீசல் படகுகள் விடுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாங்கள் பெடல் படகுகள் விடுவதாக எண்ணினோம். தற்போது டீசல் படகுகள் விடுவதால் குளத்தில் உள்ள மீன்களில் டீசல் மற்றும் பெட்ரோல் வாசம் வரும். இதனால், குளங்களில் டீசல், பெட்ரோல் படகுகள் விடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏரியில் டீசல் படகுகள் பயன்படுத்தியதால் தான் டீசல் வாசத்தினால் மீன்கள் பாதிக்கப்பட்டதாகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.விடம் கேட்டுக் கொண்டனர். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாநகராட்சி ஆணையரிடம் தொலைபேசியில் இந்த திட்டத்தை தவிர்க்குமாறும், இதன் வாயிலாக மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
-ம.பவித்ரா








