உலகிலேயே மிக விலை உயர்ந்த தேநீர் பாத்திரம் பற்றி தெரியுமா?

தேநீர் கெட்டில் என்பது பொதுவாக ஒரு சாதாரண சமையலறை பாத்திரம் தான். ஆனால் மிகவும் விலை உயர்ந்த தேநீர் கெட்டிலின் தனித்தன்மை என்ன? அதன் விலை என்ன? என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? தேநீர்…

தேநீர் கெட்டில் என்பது பொதுவாக ஒரு சாதாரண சமையலறை பாத்திரம் தான். ஆனால் மிகவும் விலை உயர்ந்த தேநீர் கெட்டிலின் தனித்தன்மை என்ன? அதன் விலை என்ன? என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

தேநீர் பிரியர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எல்லா மூலைகளிலும் உள்ளனர். அனைவரும் வெவ்வேறு வழிகளில் தேநீர் குடிக்க விரும்பலாம், ஆனால் எல்லோரும் அதை பரிமாறுவதற்கு ஒரே பொருளை தான் பயன்படுத்துகிறார்கள். அதுதான் தேநீர் கெட்டில். இந்த கெட்டில்களின் வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தாலும், அதன் செயல்பாடு ஒன்று தான், தேநீரை சூடாக வைத்து எளிதில் பரிமாற உதவுவது.

ஆனால் உலகில் மிகவும் விலை உயர்ந்த, மதிப்புமிக்க தேநீர் கெட்டில் ஒன்று உள்ளது. அதில் மக்கள் தேநீர் ஊற்றுவதற்கு முன் 100 முறை யோசிப்பார்கள். அதன் வடிவமைப்பு மிகவும் தனித்துவமானது. மேலும் விலை மிகவும் அதிகமானது. இவ்வளவு ஏன் பணக்காரர்கள் கூட அதை வாங்குவது பணத்தை வீணடிப்பதாக கருதுவார்கள்.

இந்த விலையுயர்ந்த கெட்டில் பற்றி கின்னஸ் உலக சாதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த கெட்டிலின் புகைப்படத்தை பகிர்ந்து அத்துடன், “இது உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் கெட்டில். இங்கிலாந்தில் உள்ள ஆன் செத்தியா அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த தேநீர் கெட்டில் 18 காரட் மஞ்சள் தங்கத்தால் ஆனது, முழு கெட்டிலும் வெட்டப்பட்ட வைரங்கள் மற்றும் மையத்தில் 6.67 காரட் ரூபி அமைக்கப்பட்டுள்ளது. தேநீர் கெட்டிலின் கைப்பிடி ஒரு மாமத்தின் புதைபடிவ பல்லில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு பதிவிட்டுள்ளது.

https://twitter.com/GWR/status/1689186364418330624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1689186364418330624%7Ctwgr%5E8ea79a6c35b424aa63136faae8e4077fc474a885%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Frs-24-crore-for-a-teapot-whats-so-special-about-this-record-breaking-utensil-101691739110719.html

ஆன்லைனில் சுமார் ரூ.600 முதல் ரூ.1500 வரையிலான நல்ல தரமான கண்ணாடி கெட்டில்களை நான் பார்த்திருப்போம். அதற்கும் மலிவான கெட்டில்களும் உள்ளன. ஆனால் இந்த கெட்டிலின் விலை என்ன தெரியுமா. 2016 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, இதன் மதிப்பு 3 லட்சம் டாலர்கள் அதாவது ரூ.24 கோடி. இப்போது அதிகரித்து வரும் பணவீக்கத்தில், அதன் விலை இன்னும் அதிகரித்திருக்கும். இந்த தேநீர் கெட்டில் ‘தி ஈகோயிஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.