முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் சட்டம்

காதலி தலையை தீ வைத்து எரித்தாரா? விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவு 

காதலியை 36 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காதலனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. காதலன் கொடுத்த அதிர வைத்த வாக்குமூலம் என்ன? பார்க்கலாம்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் 28 வயதான அஃப்தாப் அமீன் பூனாவாலா. இவர் அங்குள்ள பிரபல கால்சென்டரில் வேலை பார்த்து வந்தபோது அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த பால்கர் மாவட்டம் மாணிக்பூர் பகுதியை சேர்ந்த 26 வயதான ஷ்ரத்தா வாக்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து வீட்டைவிட்டு வெளியேறிய ஷ்ரத்தா, டில்லியில் உள்ள மெரெளலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறி அஃப்தாபுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இதற்கிடையே மும்பையில் உள்ள பெற்றோருடனும் ஷ்ரத்தா தொடர்ந்து பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து ஷ்ரத்தாவை அவருடைய பெற்றோரால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தின் மூலம் ஷ்ரத்தா மற்றும் அஃப்தாப் இருக்கும் முகவரியை கண்டுபிடித்த அவரது தந்தை விகாஸ் மதன், மெஹ்ராலியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். ஆனால் வீட்டுக்கு பூட்டு போட்டிருந்ததால், சந்தேகமடைந்த விகாஸ் மதன் டெல்லி போலீசில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார், அஃப்தப்பை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடீக்கிடும் தகவல் வெளியாகின. பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறிய ஷ்ரத்தா, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அஃப்தாபிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக கடந்த மே 18ம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கடும் கோபமடைந்த அஃப்தாப், ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அதன் பின்னர் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார் அஃப்தாப். வெட்டப்பட்ட உடல் பாகங்களை பாதுகாக்க புதிததாக 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்சாதனப் பெட்டியை வாங்கி, அதில் உடல் பாகங்களை மறைத்து வைத்துள்ளார்.

உடல் பாகங்களில் இருந்து வீசும் தூர்நாற்றத்தை மறைக்க ஊதுபத்திகள், ரூம் ஸ்பிரேகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளார். வெட்டப்பட்ட உடல் பாகங்களை அடுத்த 18 நாட்களுக்கு தினமும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, புது டில்லியில் பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். இந்த கொலையை செய்ய அஃப்தாப், ‘டெக்ஸ்டர்’ என்கிற ஆங்கில ‘கிரைம்’ படத்தையும், பல்வேறு வெப் சீரியல்களையும் பார்த்துள்ளார். கொலை செய்தபிறகு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து உணவு வாங்கி சாப்பிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டிய போது வீடு முழுவதும் சிதறியது ரத்ததை எப்படி துடைப்பது என்று அப்தாப்புக்கு தெரியவில்லை. இதனையடுத்து கூகுளில் ஆய்வு செய்து சில ரசாயன பொருட்களை வாங்கி ரத்த கறைகளை முழுமையாக துடைத்துள்ளார். அதே போல் சட்டையில் படிந்த ரத்தக் கறைகளையும் கூகுளில் ஆராய்ச்சி செய்து சுத்தம் செய்துள்ளார்.
அதே வீட்டிலேயே தங்கி இருந்த அஃப்தாப், வேறொரு பெண்ணுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்தும் வந்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த டெல்லி காவல்துறை அஃப்தப் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்தநிலையில், காதலி ஷ்ரத்தாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட அஃப்தாப்பின் உண்மை அறியும் சோதனை முடிவு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. அப்தாப்பிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளதாக மனு அளித்தது டெல்லி போலீஸ். மனுவை ஏற்று நீதிபதி அப்தாப்பின் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக மேலும் புதுத் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவரது தலையை எரித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் உடலின் பாகங்களின் தூர்நாற்றம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக அவற்றை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து வீசியுள்ளார் அஃப்தாப்.

ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை நாய் உள்ளிட்ட விலங்குகள் சாப்பிட்டு விட்டதாகவும் 13 எலும்புகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அந்த எலும்புகள் மரபணு சோதனைக்கு பிறகே தெரியவரும் என கூறப்படுகிறது. அஃப்தாப்புக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு உள்ளதை கண்டித்ததால் தான் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

கொலை தொடர்பாக வெளிவரும் புது புது தகவல்களால் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் போலீசார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அனைத்து ஹோட்டல்களிலும் சிசிடிவி கேமராக்கள்; உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

EZHILARASAN D

உங்கள் சொற்படியே நடக்கிறேன்… அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்

Dinesh A

தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய மரியாதையை வழங்கி வருகிறது – கனிமொழி எம்.பி

G SaravanaKumar