This News Fact Checked by ‘PTI’
வைரலான காணொலி :
ஜனவரி 29 அன்று எக்ஸ் பயனர் ஒரு காணொளியைப் பகிர்ந்து அதில் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவை அடைய நான்கு ஆண்டுகள் நடந்து வந்த மனிதர் என எழுதியிருந்தார்.
இடுகைக்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு இங்கே , கீழே அதன் ஸ்கிரீன்ஷாட் உள்ளது.
இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, டெஸ்க் கூகிளில் முக்கிய சொல்லை ஆய்வு செய்தது. இதன் மூலம் மார்ச் 22, 2021 அன்று பதிவேற்றப்பட்ட ஒரு யூடியூப் வீடியோவைக் கண்டது. அந்த வீடியோவின் தலைப்பு: “ஹரித்வார் கும்பமேளா 2021 சுவிட்சர்லாந்தைச் சார்ந்த பக்தர் 4 ஆண்டுகள் நடந்தே மகா கும்பமேளாவை அடைந்தார்.” எனக் குறிப்பிட்டிருந்தது.
யூடியூப் பதிவில் இடம்பெற்ற டிஸ்கிரிப்ஷனில் “உலகின் மிகப்பெரிய திருவிழாவான மகா கும்பமேளா ஹரித்வாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், அதில் நாங்கள் சாதுக்களின் விவாதங்கள் மற்றும் உரையாடல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்தத் தொடரில், 18 நாடுகளைக் கடந்து 4 ஆண்டுகளில் இந்தியாவை அடைந்த சுவிட்சர்லாந்தின் பெல் பாபாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தது.பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு நான்கு ஆண்டுகளாக ஒரு நபர் நடந்து வந்ததாக வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்து பிடிஐ உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியபோது நான்கு வருட பழமையான காணொலி 2025 மகா கும்பமேளாவுடன் தொடர்புபடுத்தி சமீபத்தியது போன்று சமூக ஊடகங்களில் தவறாகப் பகிரப்பட்டதாக பிடிஐ டெஸ்க் முடிவு செய்தது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.









