சொந்த ஊரில் பைக் ரைடிங் செய்த தோனி – வீடியோ வைரல்!

ராஞ்சியில் எம்.எஸ். தோனி பைக்கை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  பெங்களூருவில் மே 18 அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே – பெங்களூரு அணிகள் மோதின. …

ராஞ்சியில் எம்.எஸ். தோனி பைக்கை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பெங்களூருவில் மே 18 அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே – பெங்களூரு அணிகள் மோதின.  இதில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது.  பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது.  இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் பிளேஆப் போட்டிகளில் இருந்து வெளியேறியது.  இதனை தொடர்ந்து சிஎஸ்கே வீரர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.  அந்த வகையில் பெங்களூருவில் இருந்து தோனியும் அவரது குடும்பத்தினரும் ராஞ்சிக்கு திரும்பி உள்ளனர்.  தோனி விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே ரசிகர்கள் அவரை சூழ்ந்து கோஷமிட்டனர்.  பலரும் தோனியுடன் செல்பி எடுக்க முயன்றனர்.  மேலும் தோனியின் மனைவி சாக்ஷி சிங் ராவத் ராஞ்சிக்கு சென்றதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில்,  எம்.எஸ். தோனி பைக்கை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  அவர் பைக்கில் செல்வதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  தோனி பைக் எவ்வளவு பிடிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  மேலும் தோனி அவரது பைக்கில் சாதாரணமாக தெருக்களில் செல்லும் வீடியோ அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகும்.  ராஞ்சியில் உள்ள தோனியின் வீட்டில் கிட்டத்தட்ட 100க்கு மேற்பட்ட பைக்குகள் மற்றும் கார்கள் உள்ளதாக பேசப்படுகிறது.

https://x.com/StanMSD/status/1792493181868945579

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.