சரிந்த தங்கம் விலை…எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 54,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த சில மாதங்களாக உலகளவில் தங்கத்தின் மீது குவிந்து வரும் அதிகப்படியான முதலீடுகளால் தங்கத்தின் விலை தொடர்ந்து…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 54,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில மாதங்களாக உலகளவில் தங்கத்தின் மீது குவிந்து வரும் அதிகப்படியான முதலீடுகளால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத இந்த விலையேற்றம் நடுத்தர மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 50 அதிகரித்து ரூ. 6,900க்கும், சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.52,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,860க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி கிராமுக்கு ரூ. 2 குறைந்து ரூ. 99-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,000 குறைந்து ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.