முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

‘வாத்தியார்’ களமிறங்க போறாரா…? – பிசிசிஐ முடிவை எதிர்நோக்கியுள்ள தோனி ரசிகர்கள்

இந்திய அணியின் டி20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பொறுப்பு மீண்டும் எம்.எஸ்.தோனியிடம் கொடுக்கலாமா? என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி அரையிறுதி வரை சென்று இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இந்திய அணியின் தோல்வி பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. மேலும், இந்திய அணியிடம் பிசிசிஐ அண்மையில் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனியை மீண்டும் டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அனுபவமுள்ள தோனியை மீண்டும் அணியில் சேர்ப்பதன் மூலம் இந்திய அணியின் சரிவு மீண்டும் சரிக்கட்டப்படுமா? என்றும் பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது.

அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிக்கு பிறகு தோனி அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்றும் ஒரு கணிப்பான செய்திகள் பரவி வருகிறது. இந்தநிலையில், தோனியின் ஆட்ட யுக்திகளையும், அவரது வலிமையையும் பயன்படுத்தி கொள்ளலாம் என பிசிசிஐ இந்த முடிவு எடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் அணியில் உள்ள வீரர்களிடமும் இது தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. ஒருவேளை தோனி மீண்டும் இந்திய அணிக்காக டி20 போட்டியில் விளையாட இறங்கினால் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுகவினர் தோல்வியடைந்ததாக அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக இபிஎஸ் விமர்சனம்

Halley Karthik

’90 கோடி ரூபாய் செலவில் தஞ்சாவூர் – சாயல்குடி இருவழிச்சாலை பணி’

Arivazhagan Chinnasamy

சிவகளை அகழாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

Vandhana