கொரோனா இல்லாத பகுதியாக மாறிய தாராவி !

தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவி, கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை வேகமாக பரவியதை அடுத்து, அதைக் கட்டப்படுத்த பல்வேறு…

மிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவி, கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை வேகமாக பரவியதை அடுத்து, அதைக் கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக இருந்தது. மும்பையிலும் தொற்றுப் பரவல் அதிகமாக இருந்தது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா ஹாட் ஸ்பாட்-டாக இருந்தது. இந்நிலையில், தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தாராவி மக்கள், ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக கடைபிடித்து ஒத்துழைப்பு அளித்தனர்.

இதனால் அங்கு தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த மே 31 ஆம் தேதி முதல் ஒன்று, இரண்டு என்ற அளவில் தினசரி தொற்றுப் பதிப்பு குறைந்து வந்த நிலையில், இப்போது தொற்று இல்லாத பகுதியாக, முதல் முறையாக தாராவி மாறி இருக்கிறது. இதை மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.