தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 65 கட்சிகளும் தங்கள் தேர்தல் செலவு கணக்குகள், பங்களிப்பு நிதி உள்ளிட்டவை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கணக்கு தாக்கல் செய்யவில்லை.இதனால் அந்த அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் 2,354 பதிவு செய்யபட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளது. இதில் 92%கட்சிகள் 2019ம் ஆண்டு தேர்தலுக்காக செலவு செய்த நிதி மற்றும் பங்களிப்பு நிதி குறித்து எந்த ஒரு அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. மேலும், 87 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் கட்சிகளே ( Not in Existense ) இல்லை.
மேலும் 2,056 கட்சிகள் 2019ம் ஆண்டுக்கான வருடாந்திர கணக்கை தாக்கல் செய்யவில்லை. அதே போல், 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் போட்டியிட்ட 115 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் 15 கட்சிகள் மட்டுமே தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் விதமாக 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்குகள், பங்களிப்பு கணக்குகள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் அரசியல் கட்சிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாதா 75 காட்சிகள் போட்டியிட்ட நிலையில் 65 கட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தல் கணக்குகளை காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







