பூஜையுடன் தொடங்கியது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தென்னிந்திய திரையுலகில் பல கிளாசிக் படைப்புகளை வழங்கியதன் மூலம், பல ஆண்டுகளாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஒரு மதிப்பு…

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

தென்னிந்திய திரையுலகில் பல கிளாசிக் படைப்புகளை வழங்கியதன் மூலம், பல ஆண்டுகளாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஒரு மதிப்பு மிக்க நிறுவனமாக விளங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’என்ற புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது.

பிரமாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930 – 40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பைப் ஏற்படுத்தியது. இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

– அ.மாரித்தங்கம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.