மீண்டும் Soup boy ஆக மாறும் #Dhanush… எதிர்பார்ப்பை எகிற வைத்த ஜி.வி. பிரகாஷ்!

தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான தனுஷ், ஒரு…

தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ராயன் படத்தைத் தொடர்ந்து, தனுஷின் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம்  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பவிஷ் நடிக்கிறார். மேலும், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் வெளியாகி இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இப்பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடி இருந்தார். இந்த நிலையில், இத்திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது ரசிகர்களின் ஆவலை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இதற்கிடையே, தனுஷ் நான்காவதாக ‘இட்லி கடை’ என்ற திரைப்படத்தையும் இயக்கி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 3 திரைப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் முதல் தனுஷ் பாடிய பல சூப் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.