3-வது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி – தனுஷ் ட்வீட் !

தனுஷ் மற்றும்ஆனந்த் எல்.ராய் மூன்றாவது முறையாக இணையும் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு ’தேரே இஸ்க் மெயின்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார்.…

தனுஷ் மற்றும்ஆனந்த் எல்.ராய் மூன்றாவது முறையாக இணையும் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு ’தேரே இஸ்க் மெயின்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களான திருச்சிற்றம்பலம், வாத்தி திரைப்படங்கள் தெலுங்கிலும் நல்ல வசூல் செய்தன. தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இந்தியில் இவரது நடிப்பில் வெளியான ராஞ்சனா பெரும்வெற்றி பெற்று பாலிவுட்டில் தனுஷ்கான திரைக்கதவை திறந்து வைத்தது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இதன் பின்னர் ஷமிதாப் என்னும் திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடித்தார். பின் ராஞ்சனா திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் இணைந்து ”அட்ராங்கி ரே” என்னும் திரைப்படத்தில் இரண்டாவது முறையாக இணைந்தனர். இந்த திரைப்படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையத்தார்.

தற்போது மூன்றாவது முறையாக நடிகர் தனுஷ், ஆனந்த் எல்.ராய் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் மூன்றாவது முறையாக இணையவுள்ளனர், இத்திரைப்படத்திற்கு ’தேரே இஸ்க் மெயின்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், ராஞ்சனா திரைப்படம் வெளியாகி பத்தாண்டுகள் நிறைவு பெற்றது. சில படங்கள் வாழ்வை மாற்றும். இது அதற்கும் அப்பாற்பட்டது. என் மனமார்ந்த நன்றிகளுடன் ராஞ்சனா உலகில் இருந்து ஒரு கதை ’தேரே இஸ்க் மெயின்’  என யூடியூப்பில் லிங்கை பகிர்ந்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.