”கேப்டன் மில்லர்” படத்தை தொடர்ந்து மீண்டும் அருண் மாதேஸ்வரன் மற்றும் நடிகர் தனுஷ் இணையப்போவதாக தனுஷ் அறிவித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. அண்மையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று பதிவிட்டிருந்தார். இந்த கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என பேசப்பட்டது.
அந்த வகையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர், அவரது பிறந்தநாளையொட்டி நள்ளிரவில் வெளியானது. டீசரின் தொடக்கம் முதல் இறுதி வரை துப்பாக்கி குண்டுகள் சத்தம் தெறிக்கிறது. மேலும் யூடியூபில் இந்த டீசர் 3 கோடி பார்வைகளை கடந்து உள்ளது. இதற்கிடையே தற்போது தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என்று பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
We are elated to sign the visionary @ArunMatheswaran for our next venture, starring @dhanushkraja ✨#WunderbarFilms #Dhanush pic.twitter.com/s65u5x1mge
— Wunderbar Films (@wunderbarfilms) August 20, 2023
இந்நிலையில் இயக்குநரின் மீதான் அதீத நம்பிக்கையினால் தனது அடுத்த படமும் இவரோடுதான் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் தனுஷ். தனது சொந்த தயாரிப்பான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் தற்போது தனது 50வது படத்தினை இயக்குவதில் மும்முரமாக இருக்கிறார். அநேகமாக தனுஷ் 51வது படமாக இது இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.







