முக்கியச் செய்திகள்

கங்கனா ரனாவத்தின் ‘தாகத்’ படத்துக்கு வந்த சோதனை – 8வது நாளில் ரூ. 4,420 வசூல்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வெளியாகியுள்ள ‘தாகத்’ திரைப்படத்தின் 8வது நாளில் 20 டிக்கெட்டுகள் விற்பனையாகி ரூ. 4,420 மட்டுமே வசூலாகியுள்ளது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த ‘தாகத்’ திரைப்படம் கடந்த மே 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை ரஸ்னீஷ் காய் இயக்கியுள்ளார். இப்படத்தில் அர்ஜூன் ராம்பல், திவ்யா தத்தா, சஸ்வதா சாட்டர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இத்திரைப்படம் வெளியாகி 8 நாள்களான நிலையில் ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. இதனால், திரையரங்குகள் ‘தாகத்’ படத்தை திரையிடுவதை நிறுத்தினர். சில தியேட்டர்கள் நஷ்டத்தில் படத்தை திரையிட்டு வருகின்றன.

இதுகுறித்து பாலிவுட் ஹங்காமாவின் பாக்ஸ்-ஆபிஸ் அறிக்கையின்படி, படம் வெளியான 8ஆவது நாளில் 20 டிக்கெட்டுகளை மட்டுமே விற்று, ரூ. 4,420 வருவாய் மட்டுமே ஈட்டியுள்ளது. 80 கோடி முதல் 90 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 3 கோடி அளவுக்குகூட வசூலிக்கவில்லை. இதனால், தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டமடைந்துள்ளனர். ஓடிடி தளத்தில்கூட வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

படம் வெளியான பின்னர் நல்ல தொகைக்கு விற்கலாம் என தயாரிப்பாளர்கள் காத்திருந்த நிலையில், படம் கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. எனவே, இதன் உரிமையைப் பெற எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

படத்தின் திரையரங்க விநியோக உரிமையை ஜி ஸ்டுடியோ நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால், ஓடிடியில் வெளியிட அந்த நிறுவனம் தயாராக இல்லை. எனவே, அமேசான் பிரைமில் படத்தை விற்க தயாரிப்பாளர் தரப்பினர்  தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“ஏகே61” படப்பிடிப்பு: வெளிநாடு புறப்பட்டார் நடிகர் அஜித்!

Web Editor

கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தவர்களின் பலி எண்ணிக்கை இவ்வளவா?- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

Web Editor

திமுகவை எதிர்ப்பதில் கொஞ்சம் கூட பின்வாங்க மாட்டோம் – முன்னாள் அமைச்சர் தங்கமணி

EZHILARASAN D