28.3 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

திருத்தணி முருகன் கோயிலில் 44 நாட்களில் ரூ.1.88 கோடி உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்!

திருத்தணி முருகன் கோயில்- 44- நாட்களில் பக்தர்கள், உண்டியல் காணிக்கையாக 1.88 கோடி  செலுத்தியுள்ளானர்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற
5-படை திருக்கோயிலாகும். இந்த கோவிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்
இருந்தும் மற்றும் ஆந்திர மாநிலம், கர்நாடகா மாநிலம், கேரளா, பாண்டிச்சேரி,
உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு திருத்தணி
முருகன் கோயிலுக்கு வருகிறார்கள்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்படி மலைக்கு வரும் பக்தர்கள் முருகப்பெருமானைத் தரிசனம் செய்துவிட்டு
உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். மேலும் திருத்தணி முருகன் கோயில் உடன் இணைந்த 29 உப கோவில்களில் உண்டியல்
காணிக்கை களையும் சேர்த்து பக்தர்கள் செலுத்தும் பணம் & நகை ஆகியவற்றை
எண்ணுவதற்குத் தமிழக இந்து அறநிலைத் துறை ஆணையரிடம் அனுமதி பெற்று.

திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர் ப.விஜயா
முன்னிலையில், மலைக் கோவிலில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் பணியாளர்கள் &
மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக உண்டியல் காணிக்கைகள் என்னும் பணி ஏப்ரல்-12, ஏப்ரல்-13, ஆகிய இரண்டு தினங்களில் நடைபெற்றது எண்ணப்பட்ட முழு விவரத்தை, திருத்தணி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த 44 நாட்களில் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் பணம், 964 கிராம் தங்கம், 14 ஆயிரத்து 131 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram