சிவகங்கை மாவட்டம், மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்த 8 அடி
நீள சாரை பாம்பை, 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி
தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சாலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகத்திற்கு சொந்தமான, மின் அளவை அலுவலகம், பண்டக சாலை
மற்றும் செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 20க்கும்
மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பொறியியல் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள மின்சார பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் பண்டக சாலையில்,
சுமார் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று உள்ளே புகுந்துள்ளது.
இதனால், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து வெளியேறியதுடன்,
உடனடியாக தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து
வந்த தீயனைப்பு வீரர்கள் அதனை தேடிய நிலையில், தளவாட பொருட்களுக்குள்
சென்று மறைந்து கொண்டது. இந்நிலையில் , சுமார் 1 மணி நேரம் போராடி அந்த
பாம்பை பிடித்தனர். மேலும், அதனை மதகுபட்டி அருகேவுள்ள மண்மலை காட்டிற்குள்
சென்று விடுவித்தனர்.
—-கு.பாலமுருகன்







