“சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குப்பைகளைக் கொட்டாதீர்!” – கேரள முதலமைச்சர் வேண்டுகோள்

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் புனித பம்பை ஆற்றிலும், கோயில் வளாகத்திலும் குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல – மகரவிளக்கு யாத்திரைக் காலத்தில் பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் புனித பம்பை ஆற்றிலும், கோயில் வளாகத்திலும் குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரி மலைக்கு வருவதைக் கருத்தில் கொண்டு, ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 6 மொழிகளில் தனது எக்ஸ் தளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “சபரிமலையின் புனிதத்தையும், புனித பம்பை நதியின் தூய்மையையும் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.

பக்தர்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் தயவுசெய்து பம்பை நதியில் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது பிற கழிவுகளை வீச வேண்டாம்.

சபரிமலையையும் பம்பை நதியையும் தூய்மையாக வைத்திருக்க அனைவரும் ஒத்துழைப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.