#Devara திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியீடு!

ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் ‘தேவாரா’ திரைப்படத்தின் 3-வது பாடலான ‘தாவுடி’ வெளியாகியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர்…

Jr. N.T.R. The 3rd song 'Daudi' from the movie 'Devara' has been released.

ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் ‘தேவாரா’ திரைப்படத்தின் 3-வது பாடலான ‘தாவுடி’ வெளியாகியுள்ளது.

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவாரா’. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார்.யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள் : GOAT பேனர் விவகாரம் – நீதிமன்றம் உத்தரவு!

சமீபத்தில், இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இதனையடுத்து 3-வது பாடலான ‘தாவுடி’ இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது, ‘தாவுடி’ பாடல் வெளியாகி உள்ளது. இந்த மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் ‘தேவரா’ வெளியாக உள்ளநிலையில், ‘தாவுடி’ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.