விஜய்-ன் #GOAT புரமோ விடியோ வெளியீடு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் நாளை வெளியாகும் தி கோட் திரைப்படத்தின் வெளியீட்டு புரமோ விடியோவைப் படக்குழு பகிர்ந்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest…

film team , shared , release promo video of Vijay

விஜய் நடிப்பில் நாளை வெளியாகும் தி கோட் திரைப்படத்தின் வெளியீட்டு புரமோ விடியோவைப் படக்குழு பகிர்ந்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் நாளை (செப். 5) திரையரங்குகளில் வெளியாவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்த வங்கதேச அணி! கோப்பையுடன் உறங்கும் கேப்டன் #NajmulHossainShanto

தமிழ்நாட்டில் 1100 திரைகளிலும் வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில், கோட் திரைப்படத்தின் 9 மணி சிறப்பு காட்சிக்கு நாளை ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், கோட் திரைப்படத்தின் வெளியீட்டு புரமோ விடியோவை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதை ரசிகர்கள் இணையத்தில் அதிகளவில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.