வெற்றிமாறன், செல்வராகவன் படங்களில் நடிக்க ஆசை – நடிகர் அர்ஜூன் தாஸ் பேட்டி!

வெற்றிமாறன், செல்வராகவன் உள்ளிட்ட பெரிய இயக்குனர்களிடம் நடிக்க ஆசைப்படுவதாகவும், தனிமனித தாக்குதல் இல்லாமல் கருத்து கூறினால் அதை பயன்படுத்தி நாமும் வளரலாம் எனவும் நடிகர் அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார். கோவை சித்ரா பகுதியுள்ள பிராட்வே…

வெற்றிமாறன், செல்வராகவன் உள்ளிட்ட பெரிய இயக்குனர்களிடம் நடிக்க ஆசைப்படுவதாகவும், தனிமனித தாக்குதல் இல்லாமல் கருத்து கூறினால் அதை பயன்படுத்தி நாமும் வளரலாம் எனவும் நடிகர் அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை சித்ரா பகுதியுள்ள பிராட்வே திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள அநீதி திரைப்படத்தை ரசிகர்களுடன் படத்தின் நாயகன் அர்ஜூன் தாஸ் மற்றும் நாயகி துசாரா ஆகியோர் கண்டு களித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை துஷாரா, “அனைத்து படங்களும் தனது முதல் படத்தை போன்றது எனவும், போல்டான கதாபாத்திரங்களில் தான் நடித்து வருவதாக கூறினார்கள். ஆனால் அநீதி படத்தில் இயக்குனர் வசந்தபாலன் தனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் வழங்கியிருக்கிறார் எனவும் ஒவ்வொரு படமும் தனது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது தெரிவித்தார்.

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அர்ஜூன் தாஸுடன் இணைந்து நடிப்பேன் எனவும் திண்டுக்கல்லில் இருந்து வந்த தனக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்கி உள்ளனர், இதேபோன்று இன்னும் 10 பேர் வந்தால் தான் மகிழ்ச்சி அடைவேன் எனவும் துஷாரா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் அர்ஜூன் தாஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, இப்போதைக்கு நெகட்டிவ் ரோல் எதுவும் செய்யவில்லை. லீட் ரோலில் தான் நடித்து வருகிறேன் எனவும் வெற்றிமாறன், செல்வராகவன் உள்ளிட்ட பெரிய இயக்குனர்களிடம் நடிக்க ஆசைப்படுவதாகவும், தான் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லை எனவும்  கூறினார்.

பணம் கொடுத்து படம் பார்க்கிறவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து கூறலாம் எனவும் தனிமனித தாக்குதல் இல்லாமல் கருத்து கூறினால் அதை பயன்படுத்தி நாமும் வளரலாம் என தெரிவித்தார். இதுவரை தான் காமெடி காமெடியை முயற்சி செய்யவில்லை, காமெடியை முயற்சி செய்ய வேண்டும் என ஆசையாக இருக்கிறது, அதற்கு இயக்குனர் வாய்ப்பு கொடுத்தார்கள் என்றால் நடிப்பேன் எனவும் கூறினார்.

கோவை மக்கள் தனக்கு தொடர்ந்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் எனவும் வரும் திரைப்படங்களுக்கும் கோவை மற்றும் மதுரைக்கு வருவதை வழக்கமாக வைத்துக் கொள்வேன் எனவும் நடிகர் அர்ஜூன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.